பதிவு செய்த நாள்
24
பிப்
2020
10:02
கூடலுார்:மசினகுடி, அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, 28ல் துவங்கி, மார்ச் 3ம் தேதி வரை நடக்கிறது.நீலகிரியில் பிரசித்தி பெற்ற மசினகுடி அருகே, சோலுார் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா, கொண்டாடப்பட்டு வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், கர்நாடகா, கேரளாவில் இருந்தும், பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.நடப்பாண்டு விழா, 28-ம் தேதி துவங்குகிறது. 29ம் தேதி சிறப்பு பூஜை, மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றுதல், அபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 1ல், சிறப்பு பூஜைகள் அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு கங்கை பூஜை நடக்கிறது.திருவிழா நாளான 2ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, இரவு 10:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. 3ம் தேதி காலை, 8:45 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.கூடலுார், ஊட்டியில் இருந்து, சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.