பதிவு செய்த நாள்
26
பிப்
2020
10:02
சென்னிமலை: சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலியாக உள்ள பணியிடத்திற்கு, நேர்முக தேர்வு நடந்தது. சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பல நாட்களாக காலியாக இருந்த எழுத்தர், எலக்ட்ரீஷியன், கடைநிலை ஊழியர், மேளம், நாதஸ்வரம், குருக்கள், ஓதுவார், பூசாரி ஆகிய பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடந்தது. இதில் எட்டாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் அவர்கள் சார்ந்த துறையில் பயிற்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் டிகிரி, மற்றும் பி.இ., பட்டதாரிகளும், 50 க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். நேர்முக தேர்வை தக்கார் நந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் நடத்தினர். நேற்று காலை தொடங்கிய நேர்முக தேர்வு, மாலை வரை நீடித்தது.