கோவை: கோனியம்மன் கோவில் கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மன் அருள் பெற்றனர்.
கோனியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று இரவு கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, கிளி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மார்ச் 4ம் தேதி நடக்கிறது.