உ.வே.சாமிநாத ஐயரை ‘தமிழ்த்தாத்தா’ எனக் கொண்டாடுகிறோம். உத்தம தானபுரம் வேங்கட சுப்பையரின் மகன் என்பதால் இவரை ‘ உ.வே.சா’ எனக் குறிப்பிடுகிறோம். இதே போல வைணவப் பெரியவர்கள் தங்களின் பெயருக்கு முன் ‘உ.வே.’ என சேர்த்துக் கொள்வர். ‘உபய வேதாந்த’ என்பது இதன் விரிவாக்கம். ‘உபய’ என்றால் ‘இரண்டு’ என்பது பொருள். சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டிலும் புலமை மிக்கவர்களை ‘உ.வே.,’ குறிப்பிடுவர்.