வேலை, திருமணம், குழந்தைப் பேறு அமைய ‘ஸ்ரீராம ஜெயம்’ மந்திரத்தை ஆயிரம், லட்சம், கோடி என்ற எண்ணிக்கையில் எழுதுவர். நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களைப் போக்கும் சக்தி இதற்குண்டு.‘‘ராம’’ என்பதற்கு ‘‘பாவங்களைப் போக்கக் கூடியது’’ என்பது பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம் என்பதால் சீதைக்கு ‘‘ரமா’’ என்றும் பெயருண்டு. ‘‘லட்சுமி’’ என்றும் பொருள் சொல்வர். எனவே இந்த மந்திரத்தை எழுதுவோருக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இதை ஜபித்தால் எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும்.