காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2025 10:11
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் 9வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நவ.6 ம் தேதி மாலை அனுக்ஞை புண்யாக வாசனம், கலச ஸ்தாபனம், முதல்கால யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, இரண்டாம் கால யாகவேள்வி, கலச அபிஷேகம், சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தக்கார் ஞானசேகரன், மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.