பழநி முருகன் கோயிலுக்கு உபயதாரர் மூலம் புதிய சரக்கு வாகனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2025 11:11
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு சரக்கு வாகனம் உபயதாரர் மூலம் வழங்கப்பட்டது. பழநி முருகன் கோயில் உபயோகத்திற்காக சரக்கு வாகனம் வாங்க திட்டமிடப்பட்டது. ரூ.12,40,581 மதிப்புடைய சரக்கு வாகனத்தை பெங்களூரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணா, கல்யாண ராமசுப்பிரமணியன் மூலம் பெறப்பட்டது. நேற்று பாத விநாயகர் கோயில் அருகே சிறப்பு பூஜைகள் செய்த பின்பு கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து பெற்றுக் கொண்டார். அதிகாரிகள் உடன் இருந்தனர்.