மாசிமக தீர்த்தவாரிக்கு புறப்பட்டார் உலகளந்த பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2020 11:03
திருக்கோவிலுார்‚ திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள்‚ கடலுார் தேவனாம்ப்டினம் கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரி விழாவில் பங்கேற்க ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் கடலுார்‚ தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரி வைபவத்தில் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று காலை 6:30 மணிக்கு ஆஸ்தானத்திலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளில் புறப்பட்டார். ஆவி-புதுார்‚ குன்னத்தூர் அமாவாசைபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திரளான பக்தர்கள்ளின் வரவேற்புக்கிடையே ஆங்காங்கே மண்டகப்படியுடன் சென்றார்.
தொடர்ந்து மடப்பட்டு‚ வீரபார்‚ சின்னசேமக்கோட்டை‚ பண்ருட்டி‚ திருவதிகை‚ மேல்பட்டாம்பாக்கம் வழியாக 9ம் தேதி கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பங்கேற்கிறார். அன்று இரவு திருப்பாபுலியூர் ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் நடைபெறும் திருமஞ்சனம்‚ கருடசேவையில் பங்கேற்று‚ அங்கிருந்து மீண்டும் பாதம்தாங்கிகளில் புறப்பட்டு வரும் 17ம் தேதி திருக்கோவிலுார் ஆஸ்தானம் எழுந்தருள்கிறார். ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.