செம்பை ஏகாதசி சங்கீதம் உற்சவம்: இசை மழையில் கிராமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2020 11:03
பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவிலில் 106வது ஏகாதசி உற்சாகத்தையொட்டி உள்ள சங்கீத உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று கலைஞர்களின் சங்கீத ஆராதனையால் கிராமம் இசை மழையில் நனைந்தன.
பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் மாசி மாதம் திருவிழா ஏகாதசி திருவிழா கடந்த 2-ம் தேதிகொடி ஏற்றத்துடன் துவங்கின. விழாவையொட்டி நடக்கும் நான்கு நாள் சங்கீத உற்சவத்தை நேற்று முன்தினம் மாலை பத்மபூஷன் டி.வி., கோபாலகிருஷ்ணன், செம்பை வைத்தியநாத பாகவதர் உருவச்சிலை முன்னாள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதையடுத்து டி வி கோபாலகிருஷ்ணன் பாடினார். சன்னிதி உற்சவத்தில் இரண்டாவது நாளான நேற்று மாலை 6 மணியளவில் காசர்கோடு சேர்ந்த கலைஞர் யோகேஷ் சர்மாவின் கச்சேரி நடைபெற்றன. இவருக்கு வயலினில் கொடுந்திரபுள்ளி சுப்பராமரும் மிருதங்கத்தில் கல்லேகுளங்கர உன்னிகிருஷ்ணனும் முகர்சங்கில் வெளிநேழி ரமேஷ் பக்கவாத்தியம் வாசித்தார். இதையடுத்து நடந்த மைசூர் சந்தரகுமாரின் புல்லாங்குழல் கச்சேரி எவரையும் கவர்ந்தன. இவருக்கு வயலினில் சம்பத்தும் முதலில் கே.எம்.எஸ்., மணி முகர்சங்கில் ரமேஷும் பக்கவாத்தியம் வாசித்தனர். இரவு 8.30க்கு நடந்த சென்னை ராமநாதனின் சாக்ஸபோன் கச்சேரி நடந்தன. இன்று மாலை 6 மணிக்கு மூழி குளம் விவேகின் கச்சேரி, 7க்கு பைஜு என் ரஞ்சித்தின் வீணைக் கச்சேரி நடக்கின்றன.
சங்கீத உற்சவத்தின் சிறப்பு நாளான நாளை காலை உஞ்ச விருத்தி, 10க்கு பஞ்சரத்தின கீர்த்தனை நடக்கின்றன. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடைபெறுகின்றன. மாலை பிரகாஷ் உள்ளியேரியின் ஆர்மோனியம் கச்சேரி, விஜய் யேசுதாஸ், இரவு 8க்கு பிரபல இசைக்கலைஞர் யேசுதாஸ், 10க்கு ஜயன் ஆகியோரின் சங்கீத கச்சேரி நடைபெறுகின்றன. 7ம் தேதி நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் கோவில் உற்சவம் நிறைவு பெறுகின்றன.