மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வலியபடுக்கை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2020 01:03
நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நள்ளிரவில் நடைபெற்ற வலியபடுக்கை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு மாசி திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வலியபடுக்கை பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு நடைபெற்றது. பலா, மா,வாழை பழங்கள், கரும்பு, தினை, எள்ளு, தென்னங்கன்று, முற்றிய தேங்காய் போன்றவற்றை பகவதி அம்மன் முன்பு படைத்து நடத்துவது இந்த பூஜையின் சிறப்பாகும். ஆண்டிற்கு மூன்று முறை இந்த பூஜை நடைபெற்றாலும் மாசி திருவிழாவின்போது நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிறைவு நிகழ்ச்சியாக 10ம் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக தென் மாவட்டங்களில் இருந்து 800 போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.