ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா: குவிந்த பெண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2020 11:03
ஆற்றுக்கால்: தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலின் மாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தனது சினத்தால் மதுரையை எரித்த கண்ணகியை அமைதிப்படுத்த பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவதே ஆற்றுக்கால் பொங்கல் விழா. இந்த ஆண்டு மார்.,1ம் தேதி தொடங்கியது. இன்று (9ம் தேதி) காலை, 10:20 மணிக்கு, பல லட்சம் பெண்கள் பங்கேற்கும் பொங்கல் விழா நடைபெற்றது. கோயில் முன்புறம் உள்ள பிரதான அடுப்பில் தீ மூட்டியதும் ஒலி பெருக்கியில் செண்டை மேளம் இசைக்கப்பட்டு, கோயிலை சுற்றி 10 கி.மீ. சுற்றளவில் உள்ள லட்சக்கணக்கான அடுப்புகளில் தீ மூட்டப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது. பூஜாரிகள் எல்லா பகுதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்தினர்.
கொரோனா வைரஸ் தாக்குதல்: மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 5 பேர் பாதிக்கப்பட்டிருந்த போதும் பொங்கல் விழாவை தவிர்க்க முடியாது என மாநில மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷை லஜா கூறுகையில் சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக பொங்கலை வைத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து மக்கள் அதிக அளவில் கூடுவர் என்பதால் சுகாதாரத்துறையினர் அப்பகுதிகளில் மேற்பார்வையிட்டு வருகின்றனர். விழாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் வீடியோ எடுக்கப்படும். அவர்களுக்கு எந்த ஒரு பிரச்னை என்ற போதிலும் அவர்களின் குடும்பத்தினரை எளிதாக தொடர்பு வசதியாக இருக்கும் என கூறி உள்ளார். மேலும் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் கோபால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் , பொங்கல் விழாவில் பங்றே்பதை வெளிநாட்டவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அவர்கள் தங்கி இருக்கும் ஓட்டலிலேயே பொங்கல் பிரசாதம் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.