அம்மாபேட்டை: அம்மாபேட்டை, குருவரெட்டியூர் அருகேயுள்ள, ஆனைக்கவுண்டனூரில் பழமையான அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடப்பது வழக்கம். இதையொட்டி கடந்த, 7ல் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். முதல் கால் வேள்வி பூஜை தொடங்கியது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம், அக்னி மாரியம்மன் கோவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி, நேற்று அதிகாலை நடந்தது. அம்மாபேட்டை, குருவரெட்டியூர், ஊமாரெட்டியூர், அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.