Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவ.,2ல் ராமானுஜர் தென்னாச்சாரியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோவிலில் பக்தர் வரிசையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோவிலில் பக்தர் வரிசையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

பதிவு செய்த நாள்

23 அக்
2025
10:10

 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இரும்பு மேம்பாலம் அமைத்து பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்த முடியுமா’ என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கோவில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


திருச்செந்துார் சிவசுப்பிரமணிய பட்டர் உட்பட 11 பேர் தாக்கல் செய்த மனு: அறநிலையத்துறை கமிஷனர், திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கோயில் செயல் அலுவலர் 2004 மற்றும் 2005ல் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் அக்கோயிலில் அர்ச்சனை, ஆராதனை, பூஜை உள்ளிட்ட கைங்கரியங்களில் எங்கள் குடும்பத்தினரை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கு திருச்செந்துார் கோயில் பட்டர்கள், திரிசுதந்திரர்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பானது. இதனால் பக்தர்கள் நலனை பாதிக்கும் பல பிரச்னைகள் எழுந்துள்ளன. கீழ்கண்ட கேள்விகளை இந்நீதிமன்றம் எழுப்புகிறது.


குருவாயூர், திருப்பதி கோயில்களில் உள்ளதுபோல் திருச்செந்துார் கோயிலில் இரும்பு மேம்பாலம் அமைத்து பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்த முடியுமா, தற்போதுள்ள ஏற்பாடுகளால் கடிகாரம் சுற்றும் திசையில் பக்தர்கள் செல்ல முடியாது என்பது உண்மையா, வி.ஐ.பி.,–வி.வி.ஐ.பி., தரிசனங்களை அனுமதிப்பதால், பொதுவான பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டுமா, கோயில் நிர்வாகம் வி.ஐ.பி.,– வி.வி.ஐ.பி.,தரிசனத்திற்கு தனி நேரம் ஒதுக்க விரும்புகிறதா, உண்மையெனில் இதை தவிர்க்க கோயில் நிர்வாகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, வி.ஐ.பி.,கள் தரிசனத்தின்போது பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்படுவதால், வி.ஐ.பி., தரிசனத்திற்காக பக்தர்களின் வரிசை நிறுத்தப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா, கோயிலுக்கு வரும் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தனி திட்டம் வகுப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் ஆலோசித்துள்ளதா.


பக்தர்கள் வரிசை நகர்வு தடைபடாத வகையில் இலைகளில் விபூதி உள்ளிட்ட பிரசாதம் வினியோகிக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதா, தற்போது கோயில் உட்பிரகாரத்தில் பிரசாதம் வினியோகம் செய்யப்படுகிறதா, திரிசுதந்திரர்கள், பட்டர்கள், ஸ்தானிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் உள்ளதா, கோயிலில் இவர்களின் முறை வராதபோது, வரிசையை கடந்து இவர்கள் பக்தர்களை அழைத்துச் செல்ல அனுமதிப்பதில்லை என்பதை உறுதி செய்ய திட்டம் உள்ளதா, போதிய கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதற்கு கோயில் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar