சென்னிமலை: தன்னாசியப்பன் கோவிலில் மாசி திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவில் பின்புறம், சித்தர் லாடகுரு அய்யன் தன்னாசியப்பன் கோவில் உள்ளது. இங்கு, 15ம் ஆண்டு மாசி திருவிழா மற்றும் பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்ட யாக சாலையில், மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் யாக பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பின்னாக்கு சித்தர், சரவணமாமுனிவர் மற்றும் தன்னாசியப்பர் சித்தர் சாமிகளுக்கு, பக்தர்கள் கொண்டு சென்ற தீர்த்தம் மூலம் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, அய்யன் தன்னாசியப்பன் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்தனர்.