Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் காப்பு ... திருச்செந்துார் கோவிலில் பக்தர் வரிசையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி திருச்செந்துார் கோவிலில் பக்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவ.,2ல் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா; தமிழக ஜீயர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
நவ.,2ல் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா; தமிழக ஜீயர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

23 அக்
2025
10:10

சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ஜெயந்தி கொண்டாட்டம் சென்னை, காமராஜர் அரங்கில் நவ., 2ல் கொண்டாடப்படுகிறது.


இது குறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமெரிக்கை நாராயணன் கூறியதாவது: வைணவ ஆச்சாரியார் ராமானுஜர், வானமாமலை, திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கோவிலுார், ஆழ்வார் திருநகரி பிள்ளான், தொட்டாசார், எம்பார், ஆளவந்தார் உள்ளிட்ட 74 பீடங்களை நியமித்தார். . இந்த, 74 பீடங்கள் துவங்கிய காலக்கட்டத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்படாமல் இருந்தன. பல்வேறு காலக்கட்டங்களில் பல ஜீயர்கள் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் ஆசிர்வாதத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும் இந்த முயற்சியில் ஈடுபட்டேன். ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், ஆழ்வார் திருநகரி என, பல இடங்களில் ஆச்சார்யர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆச்சார்யார்கள், ஜீயர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. பலரின் பெரு முயற்சியால், தற்போது தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை, நவ., 2ல் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விழா சென்னை, காமராஜர் அரங்கில் நடக்க உள்ளது.


இந்த தென்னாச்சாரியார் சம்பிரதாயம் என்பது அய்யங்கார்களுக்கு மட்டும் இல்லை; அய்யங்கார் அல்லாத வைணவ சம்பிரதாயம் கடைபிடிக்கும் அனைவருக்கும் தான். இந்நிகழ்ச்சியில் ஒரே மேடையில் ஜீயர்களும், ஆச்சார்யர்களும் அலங்கரிக்க உள்ளனர். காலை 8:00 மணிக்கு, டாக்டர் வெங்கடேஷின் உபன்யாசத்துடன் விழா துவங்க உள்ளது. மதியம் வரை நடக்கும் விழாவில், ஜீயர்கள் அனைவருக்கும் அட்சதை ஆசீர்வாதம் செய்ய உள்ளனர். பிற்பகல், ஜீயர்கள் மற்றும் ஆச்சார்யர்கள்ஒருங்கிணைந்து, தென்னாச்சாரியார் சம்பிரதாய சபையை வழிநடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளனர். விழாவில் நுால் ஒன்றும் வெளியிடப்படுகிறது. அதில், ஒவ்வொரு திருமாளிகை எனும் பீடம் குறித்த குறிப்பு, யார் தற்போதைய ஜீயர், ஆச்சார்யர்கள் தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. விழாவில் ஆசீர்வாதம் பெற விரும்பும், அனைத்து ஹிந்துக்களும் பங்கேற்கலாம். பங்கேற்பாளர் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவிற்கான,‘கியூ -ஆர்’ கோடு உள்ளது. மேலும் 99410 03120 என்ற அலைபேசி எண்ணில், ‘மிஸ்டு கால்’ கொடுத்து முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar