காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி,பங்குனி விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2020 10:03
காரைக்குடி:காரைக்குடி முத்துப்பட்டினம் முத்துமாரியம்மன்கோயில் மாசி-பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது. காலை 6:00 மணிக்கு நடைபெற்ற கொடியேற்றத்தில், பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சிறுவர்கள், சிறுமிகள், பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். விழாவையொட்டி, பக்தர்கள், பால்குடம், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். தினமும் மாலை, அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெறும். அதனைத்தொடர்ந்து மார்ச்18 ல் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நடைபெறும்.