பதிவு செய்த நாள்
11
மார்
2020
10:03
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், மூன்று நாள் தவன உற்சவம், துவங்கியது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், மாசி மாதத்தில் நடைபெறும் தவன உற்சவம், நேற்று துவங்கியது.சுவாமி, மாடவீதியை சுற்றி, பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஆழ்வார் பங்களாவிற்கு, மாலை, 6:00 மணிக்கு சென்றார்.அங்கு, ஆராதனை முடிந்ததும், இரவு கோவிலுக்கு புறப்பட்டார். வரும், 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள், தாயார்குளம் தெப்பத்தில், உற்சவம் நடைபெறுகிறது. இதற்காக, கச்சபேஸ்வரர், சுந்தராம்பிகையுடன் அன்று மாலை, 6:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, தெப்பலில் எழுந்தருள்வார்.