பதிவு செய்த நாள்
11
மார்
2020
10:03
ஈரோடு: பெரியமாரியம்மன் கோவில் திருவிழா தற்காலிக கடைகள் ஏலம், நாளை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 17ல் பூச்சாட்டுடன் தொடங்குகிறது. 21ல் கம்பம் நடுதல், ஏப்.,1ல் பொங்கல் விழா, தேரோட்டம் நடக்கிறது. ஏப்.,4ல் கம்பம் எடுத்தல் மஞ்சள் நீராட்டம், 5ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்காக அமைக்கப்படும் பிரமாண்ட பந்தலில், தற்காலிக கடைகள் வைக்க அனுமதிக்கப்படும். மொத்தம், 35 கடைகள் அமைப்பதற்கான ஏலம், பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் நாளை நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டாக, மேம்பாலம் கட்டுமான பணி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட காரணத்தால், தற்காலிக கடைகளின் எண்ணிக்கை குறைந்து, ஏலத்தொகையும் சரிந்தது. ஆனால், நடப்பாண்டு பணிகள் முடிந்து போக்குவரத்து துவங்கி விட்டதால், கடைகள் கூடுதலான தொகைக்கு போக வாய்ப்புள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.