மாரியம்மன் திருவிழாவில் கோலாகலம் நெகிழ வைத்த ஹெத்து பரடி படுகர் நாடகம் நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2020 10:03
ஊட்டி:ஊட்டி, அருகே உள்ள அணிக்கொரை கிராமத்தில், 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆண்டுதோறும் மார்ச் மாதம் இந்த கிராமத்தில் மாரியம்மன் திரு விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திருவிழாவையொட்டி பொன் முத்து மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான கிராம மக்கள் காணிக்கை செலுத்தினர்.இரவு, 9:00 மணிக்கு பொன் முத்துமாரியம்மன் கோவிலில் துவங்கிய அம்மன் தேர்பவனி, கிராமத்தில் உள்ள நாகேந்திர கோவிலுக்கு கிராம மக்கள் புடைசூழ சென்றது. வழிநெடுகிலும் வண்ண விளக்கு ஒளியில் சிறப்பு தேர்பவனியில் வந்த அம்மனை மக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர். பூஜைகள் முடிந்ததும் மீண்டும் பொன் முத்துமாரியம்மன் கோவில் வந்தடைந்தது.தேர்பவனியின் போது நடந்த வான வேடிக்கை பிரம்மிப்பாக இருந்தது. தொடர்ந்து, ஹெத்து பரடி என்னும் படுகர் நாடகம் அனைவரையும் நெகிழ வைத்தது. மறுநாள் சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.