பதிவு செய்த நாள்
14
மார்
2020
10:03
ஈரோடு: ஈரோடு, கோட்டையில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலின் வகையறா கோவில்களாக கஸ்தூரி அரங்கநாதர், மகிமாலீஸ்வரர் கோவில்கள் உள்ளன. மூன்று கோவில்களிலும், 19 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும். இதன்படி, இந்து அறநிலையத்துறை கோவை உதவி ஆணையர் விமலா, ஈஸ்வரன் கோவில் செயல் அதிகாரி கங்காதரன் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. பள்ளி மாணவர், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மொத்தம், ஐந்து லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய், 11 கிராம் தங்கம், 34 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.