பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, பாண்டியன் கிணறு வீதியில், நந்தவனம், பெரிய விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் நடந்த திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம், விநாயகர் வழிபாட்டுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து கோபுரங்களுக்கு, கலசம் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 10:00 மணியளவில், கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூலவர் பெரிய விநாயகருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவை சண்முக சரவண சுப்ரமண்ய குருக்கள் நடத்தி வைத்தார். புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர்.