வெளிநாட்டு பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: கலெக்டர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2020 04:03
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் அர்ஜுன் சர்மா அறிவுறுத்தல்.
காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில்ஸ்ரீ சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதனால் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதில் உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.இதில் திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன்கருதி முன்னெச்சரிக்கை மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் திருநள்ளார் கோவில் நகரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டவர்கள். குடியேறிய இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை புரியும் இந்தியர்கள் நம் நாட்டின் நுழைந்தபின் 28 நாட்களுக்கு கோவிலுக்கு வருவதை தவிர்க்கும்படி கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் பக்தர்கள் நலன் கருதி கோவிலுக்கு வருவது தற்காலிகமாக தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தடுப்பு நடவடிக்கை எடுத்து பக்தர்கள் தங்களின் மேலான ஒத்துழைப்பை தருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கலெக்டர் அறிவித்துள்ளார்.