பழநி :பழநி பாலசமுத்திரம் ரோட்டில் மயிலாடும் பாறை அருகே கந்த விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது.பழநி சரவணபொய்கை கந்தவிலாஸ் சார்பில் பாலசமுத்திரம் ரோட்டில் மயிலாடும் பாறை அருகே கந்த விநாயகர் ஆலயம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேகத்தையொட்டி 2 கால பூஜைகள் நடந்தது. பழநி, திருஆவினன்குடி, மூர்த்தி குருக்கள் கும்பாபிஷேக விழாவை நடத்தினார். சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், தனலட்சுமி, நிகால் விஷ்ணு விழா ஏற்பாடுகளை செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.