பழநி :பழநி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடந்தது.பழநி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது. பழநிகோயில் இணை ஆணையர் ஜெய சந்தரபானுரெட்டி, வணிகவரித்துறை இணைஆணையர் தேவேந்திர பூபதி, போகர் புலிப்பாணி சுவாமிகள் துவங்கி வைத்தனர்.கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிஹர முத்து முன்னிலை வகித்தனர். வருத்தமில்லா வாலிபர் சங்கம் நிர்வாகிகள் தலைவர் மூர்த்தி, நிர்வாக கமிட்டி தலைவர் முருகானந்தம், பொருளாளர் மதனம் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.