பதிவு செய்த நாள்
14
மார்
2020
10:03
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், காவிரிக்கரை முனியப்பன் நகரில், பிரசித்தி பெற்ற காவிரி முனியப்பசாமி கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. இதையடுத்து பவானி கூடுதுறையில், புனித நீராடிய பக்தர்கள், தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, மூலமந்திர ஹோமம், கோ பூஜைக்கு பின், 6:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்துக்கு சீவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். மஹா தீபாராதனையை தொடர்ந்து, பக்தர்கள் மீது கலச தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று முதல், 24 நாட்களுக்கு காலை, மாலையில் மண்டல பூஜை நடக்கிறது.