பதிவு செய்த நாள்
16
மார்
2020
10:03
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், வரும், 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், வரும், 28ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 7:00 - 8:00 மணிக்குள், கொடியேற்றப்படுகிறது. ஏப்., 10ம் தேதி, பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.