பதிவு செய்த நாள்
16
மார்
2020
10:03
மாமல்லபுரம்:கேரள தடை விதிப்பால், கல்பாக்கம் பகுதி, அய்யப்ப பக்தர்கள், சென்னையில் தரிசித்தனர்.கல்பாக்கம், அணுசக்தித் துறையினர், ஆயப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுபுற பகுதியினர் என, சபரிமலை கோவில் அய்யப்பனை தரிசிக்க, மாலை அணிந்து, விரதம் இருந்தனர்.இவர்கள், சபரிமலை செல்ல இருந்த நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியாக, அங்கு பக்தர்கள் வர, தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு செல்லாமல் தவிர்த்து, சென்னை, அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர்.