அந்தியூர்: ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் பல்வேறு இடங்களில் எட்டு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை திறந்து, காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில், அந்தியூர் தனியார் கல்லூரி மாணவியர், ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 8.26 லட்சம் ரூபாய், 166 கிராம் தங்கம், 255 கிராம் வெள்ளி கிடைத்தது. கோவில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டதாக, செயல் அலுவலர் தெரிவித்தார்