புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்டம் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். மக்கள் கும்பலாக கூடுவதை தவிர்க்க சனிஸ்வர பகவான் கோவிலில் மார்ச் 31ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் பரிகாரங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் ரத்து செய்யப்பட்டு தினப்படி பூஜைகள் மட்டுமே நடைபெறும். பக்தர்கள் கோவிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.