பதிவு செய்த நாள்
20
மார்
2020
03:03
திருச்சி: தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா, கொரோனா வைரஸ் பிரச்னையால் ஒத்தி வைக்கப்பட்டது.
திருச்சி, முசிறி அருகே உள்ள தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா வரும், 24ம் தேதி முதல் ஏப்., 7ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை முசிறி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, தொற்று நோய் பரவாமல் இருக்க, திருவிழாவை தள்ளி வைக்க தீர்மானிக்கப்பட்டது. கொரோனா பீதி முடிந்த பின், திருவிழாவை நடத்திக் கொள்வது என்றும், தேவைப்படின், திருவிழாவை தள்ளி வைத்ததற்காக பரிகார பூஜை செய்து கொள்ளலாம் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தேரோட்டம் ஒத்தி வைப்பு: திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் உப கோவிலான, திருவெள்ளரை பெருமாள் கோவிலில், இன்று பங்குனி தேரோட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னையால், தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, தேரோட்டம் நிலைத்தேராக கொண்டாடப்படும். காலை, ஒரு மணி நேரம் மட்டும் பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.