பதிவு செய்த நாள்
22
மார்
2020
03:03
புன்செய்புளியம்பட்டி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நடப்பாண்டு பிரசித்தி பெற்ற, சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, நுழைவாயில் அடைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பண்ணாரி அம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் வருகின்றனர். நேற்று வந்த பக்தர்கள், கோவிலின் தெற்குப்புற நுழைவாயில் முன், தேங்காய் உடைத்து பழம், வெற்றிலை பாக்கு வைத்து, கற்பூரம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். கொரோனாவை தடுக்கவே, கோவில் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை உதாசீனம் செய்து, பக்தர்கள் கோவிலுக்கு வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.