பூமியை விட 13 லட்சம் மடங்கு பெரியது சூரியன். பூமியிலிருந்து 15 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. எல்லா கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது. சூரியனில் அதிக வெப்பத்தை தரக்கூடிய ஹீலியம், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் உள்ளன. இந்த வெப்பம் வினாடிக்கு 300 கோடி யூனிட் மின்சக்தியாக வெளிப்படுகிறது. இது பூமியை வந்தடையும் போது வெப்ப சக்தியாக மாறி விடுகிறது.