பழநி திருஆவினன்குடி கோயிலில் சங்காபிஷேகம், யாக பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2026 10:11
பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் சங்காபிஷேகம், யாக பூஜை நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோவிலான திருஆவினன்குடி கோயில் சன்னதி வீதியில் உள்ளது. திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் நேற்று வருடாபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு யாக பூஜையில்108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கலசங்கள் வைத்து வேத மந்திரங்கள் முழங்க வேள்வி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைவேலாயுதசுவாமிக்கு தியாக பூஜையில் வைக்கப்பட்ட 108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீர், கலச நீர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.