திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற குவிந்த மக்கள்: மலைமேல் காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2026 06:11
மதுரை: : திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதுனையடுத்து தீபம் ஏற்ற ஏராளமான பக்தர்கள் மலையில் குவிந்தனர்.
சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில், நேற்று (நவம்பர் 28) மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நிர்வாகப் பொறுப்பாளர்களின் உத்தரவின்படி, உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் மட்டும் இன்று (நவம்பர் 29) முதல் டிசம்பர் 15ம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுனையடுத்து மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இன்று உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.மேலும் மலைமேல் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்து திரும்பினர்.