போதி தர்மர் புத்த விஹார் கோவிலில் ஆஸ்திரேலிய துாதரக அதிகாரி வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2026 10:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வையாவூர் சாலையில் உள்ள, போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவிலில், சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணை துாதரகத்தின் தலைமை அதிகாரி கேமரூன் நோபிள், தன் குடும்பத்தினருடன் நேற்று வழிபாடு செய்தார்.
காஞ்சிபுரம் – வையாவூர் சாலை, கோனேரிகுப்பம் ஊராட்சி, காமாட்சியம்மன் நகரில், போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவிலுக்கு, சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணை துாதரகத்தின் தலைமை அதிகாரி கேமரூன் நோபிள் தன் குடும்பத்தினருடன் நேற்று வந்தார். விஹாரில் உள்ள போதி தர்மர் திருவுருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கி மரியாதை செய்தார். தொடர்ந்து, புத்தருடைய புனித தாதுக்கள் வைத்து கட்டப்பட்டுள்ள பவுத்த ஸ்துாபியையும் வணங்கினார். புத்த பிக்கு புத்த பிரகாசம், துாதரக அதிகாரிக்கு, மும்மணிகளின் ஆசீர்வாதம் வழங்கினார். முன்னதாக, விஹாரின் தலைவர் மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நலக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, உதவி ஆணையர் மூர்த்தி, செந்தில்வேல் ஆகியோர் துாதரக அதிகாரிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.