மதுரை :மதுரையில் கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் பிப்., 26 ல் துவங்கி ஏப்.,12 ல் ஈஸ்டர் தவக்காலத்துடன் நிறைவடைகிறது. அடுத்ததாக புனித வாரம் நேற்று துவங்கி ஏப்., 12 ல் முடிகிறது. கொரோனா தாக்குதலால் வீட்டிலில் இருந்தபடி மக்கள் புனித வாரத்தை கடைபிடிக்க வேண்டும். புனித வாரத்தின் முதல் நாளான நேற்று வீடுகளில் குருத்தோலைகளை ஏந்தி திருப்பலி நடந்தது.