பதிவு செய்த நாள்
06
ஏப்
2020
12:04
குன்னூர்: குன்னூரில், தனிமைப்படுத்திய ஏரியாவில், மாசானியம்மன் கோவில் குழுவினர் சார்பில், மஞ்சள், வேப்பிலை உள்ளிட்டவற்றை தெளித்தனர்.
டில்லி சென்று திரும்பிய குன்னூர் ராஜாஜிநகரை சேர்ந்தவர் தனிமைப் படுத்தப்பட்டார், இதனால் இந்த பகுதியை சுற்றி ரேலி காம்பவுண்ட், மாடல்ஹவுஸ், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகள் மூடப்பட்டது. தினமும் டாக்டர் தலைமையிலான குழுவினர் வீடுகள் தோறும் சென்று மக்களை பரிசோதனை செய்கின்றனர். இந்நிலையில், தனிமைப்படுத்திய ஏரியாக்களில், குன்னூர் மாசானியம்மன் கோவில் நிர்வாகத்தினர் சார்பில், மஞ்சள், வேப்பிலை, சாணி, உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, தெளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், வேப்பிலை, மஞ்சள் உள்ளிட்டவை மருத்துவத்தில் பயனுள்ளதாக உள்ள நிலையில், கிருமிநாசினியாக பயன்படுத்தி தெளிக்கப்பட்டது. " என்றார்.