வீட்டில் நிலைப்படியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். அதனால் தலைவாசலில் மங்கலகரமாக மாவிலைத் தோரணம் கட்டுவர். இதற்கான காரணம் ஒன்றுஉண்டு. வீட்டில் "வாக்தேவதை என்றொரு தேவதை நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். நாம் எந்த வார்த்தை சொன்னாலும் அத்தேவதை "அப்படியே ஆகட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும். நன்மை தரும் சுபவார்த்தைகளைச் சொன்னால் அவ்வீட்டில் வாக்தேவதையும் "அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதிக்கும். அசுபமான கெடுவார்த்தைகளைச் சொன்னால் அதையும் "அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிடும். ஆனால், மாவிலைத் தோரணம் கட்டியிருக்கும் வீட்டில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டால் மாவிலை காற்றில் அசைந்து அவ்வார்த்தையின் பலனை வெளியேற்றி விடும்.