பெரிய கோயில்களில் அர்த்தமண்டபம், மகாமண்டபம் பிரதானமாக அமைந்திருக்கும். மண்டபம் முழுவதும் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த கல்தூண்கள் அமைந்துள்ள மண்டபத்தை "கால் மண்டபங்கள் என்பர். நூறு கல்தூண்கள் இருந்தால் நூற்றுக்கால் மண்டபம் என்றும், ஆயிரம் கல்தூண்கள் இருந்தால் ஆயிரங்கால் மண்டபம் என்றும் அழைக்கப்படும். திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல் (திருச்சி அருகில்), ஸ்ரீரங்கம், திருவாரூர், திருவக்கரை (விழுப்புரம் மாவட்டம்), காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, குடுமியான்மலை தலங்களில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன.