திருமலையில் கார்த்திகை பவுர்ணமி கருட சேவை கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2025 11:11
திருப்பதி; திருமலையில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.
திருமலையில் கார்த்திகை பவுர்ணமியான நேன்று புதன்கிழமை இரவு கருட சேவை கொண்டாடப்பட்டது. இரவு 7 மணிக்கு, அனைத்து அலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி, கருடனின் மீது கோயிலின் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கருட வாகனத்தில் சுவாமியை தரிசிக்க அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. விழாவில் ஏராளமான பக்தர்கள், திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமி, கோயில் பேஷ்கர் ராமகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.