திருநாவுக்கரசர் முக்தி பெற்ற சிவத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் நன்னில் அருகிலுள்ள திருப்புகலுார். இங்கு அக்னீஸ்வரராக சிவன் கோயில் கொண்டிருக்கிறார். சுவாமியின் திருமேனி சற்று சாய்ந்திருப்பதால் ‘கோணப்பிரான்’ என்றும் பெயருண்டு. நாவுக்கரசர் இக்கோயிலை சுத்தப்படுத்திய போது, சோதிக்க எண்ணிய சிவன் பிரகாரத்தில் பொன்னும், நவமணிகளும் சிதறி கிடக்கச் செய்தார். நாவுக்கரசர் சிறிதும் மயங்காமல், கையில் இருந்த உழவாரக் கருவியால் தள்ளி விட்டு நடந்தார். பொன்மனச் படைத்த நாவுக்கரசர் மகிழும் விதத்தில் சுவாமி அம்பிகையுடன் காட்சியளி்த்தார்.