புதுச்சேரி; முத்தியால்பேட்டை, லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பவித்ரோற்சவப் பூர்த்தி இன்று நடக்கிறது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 54ம் ஆண்டு பவித்ரோற்சவம் கடந்த 7ம் தேதி நடந்தது. இதையொட்டி, நேற்று காலை மூலவர், உற்சவர் திருமஞ்சனம், மாலை அனுக்ஞை மருத்சங்கரஹணம், தொடர்ந்து, 92 திருவாராதனம் நிறைவு நடந்தது. இதில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வாக, இன்று 12ம் தேதி திருவோண நட்சத்திரம், காலை கருடசேவை, அவப்ருதம், பூர்ணாஹூதி, சாத்துமுறை, பவித்ரோற்சவப் பூர்த்தி நடக்கிறது. ஏற்பாடுகளை வேத ஆகம ஸம்பரக் ஷண லஷ்மி சரஸ் மாருதி டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.