ஆனி கடைசி சனி, திருவோண விரதம்; கொடிசியா வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2025 10:07
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது இதில் சர்வ அலங்காரத்தில் மூலவர் வெங்கடேச பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
*ஆனி மாதம் கடைசி சனி கிழமையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்துடன் சந்தன காப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.