* மற்ற உயிர்களுக்கு இல்லாத சிறப்பு மனிதனுக்கு உண்டு. சிரிப்பு கடவுள் நமக்கு அளித்த கொடை. அன்புணர்வுடன் அனைவரிடமும் எப்போதும் சிரித்து மகிழுங்கள். * உடலை வளர்க்க உணவு அவசியம். அதுபோல, உயிரை வளர்க்க அன்றாடம் கடவுள் வழிபாடு அவசியம். * பசுவின் உடல் முழுவதும் பால் இருந்தாலும், மடியின் மூலமாகப் பெற முடியும். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் கோயில் வழிபாட்டின் மூலமே அருளைப் பெற முடியும். * உடல் பலம் பெற தேகப்பயிற்சி செசய்வது போல, அன்றாடம் பிரார்த்தனை செசய்து வந்தால் மட்டுமே ஆத்மபலம் பெற முடியும். * ஒரு விதையில் வளர்ந்த மரமானது ஆயிரமாயிரம் கனிகளைக் கொடுக்கிறது. பிறருக்கு செசய்த நன்மையும் அவ்வாறே ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பி வரும். * மனம் இருந்தால் அதில் மானம் இருப்பதும், தனம்(செசல்வம்) இருந்தால் நாலுபேருக்கு நல்லது நடக்க தான தர்மமும் செசய்ய வேண்டியது அவசியம். * நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு பாராட்டுங்கள். அந்த நட்பு மாலை நிழல் வளர்ந்து கொண்டே போகும். * படிப்பாலும், பணத்தாலும் மட்டுமே பெருமை உண்டாவதில்லை. நல்ல பண்பும், ஒழுக்கமும் இருந்தால் மட்டுமே வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.