பதிவு செய்த நாள்
30
ஏப்
2020
03:04
கோவை: நாகசக்தி அம்மன் தெய்வீக மூலிகை ஆராய்ச்சி மையம் சார்பில், கோவை மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, கப சுர குடிநீர் வழங்கப்பட்டது.கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், கப சுர குடிநீர் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்பு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை இலை, சீந்தில், சிறுதேக்கு, வட்டத்திருப்பி வேர், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, கற்பூரவல்லி இலை, கடுக்காய் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட மூலிகை பொருட்கள் சேர்த்து, இதற்கான சூரணம் தயாரிக்கப்படுகிறது. சளி, இருமல், சிரமமின்றி மூச்சு விடுவதற்கு, இது உதவும். கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், போலீசார் மற்றும் அரசு அலுவலக பணியாளர்களுக்கு, நாகசக்தி அம்மன் தெய்வீக ஆராய்ச்சி மையம் சார்பில், கப சுர குடிநீர் வழங்கப்பட்டது. ஆராய்ச்சி மையத்தின் பாபுஜி சுவாமிகள் தலைமையில், அவரது குழுவை சேர்ந்த முருகன், சித்த மருத்துவர்கள் கதிர்வேல், கணேஷ்குமார், உமாமகேஸ்வரி உள்ளிட்ட, 30 பேர் கொண்ட குழுவினர், ஏழு வாகனங்களில் சென்று, கப சுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.