மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நாளை (மே 4) பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் கேசரி, வடை, காளான் பிரியாணி, தயிர் சாதம் ஆகியவை பார்சலாக தயாரித்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், போலீசாரிடம் வழங்கப்படும். இவ்விருந்திற்கும், கோயில் நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை என அதன் தலைவர் விவேகானந்தன் தெரிவித்தார்.