பதிவு செய்த நாள்
03
மே
2020
01:05
ராமேஸ்வரம்: கொரோனா ஊரடங்கால் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய வந்த குஜராத், ராஜஸ்தான்,உ.பி., பீகார், மஹாராஷ்டிரா பக்தர்கள், கூலி தொழிலாளர்கள் என 185 பேர் சொந்த ஊர்செல்ல முடியாமல், ராமேஸ்வரத்தில் முடங்கி உள்ளனர். இவர்களுக்கு வருவாய்த் துறை, நகராட்சி அதிகாரிகள் உணவு வழங்கி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். இவர்களிடம் நேற்று கலெக்டர்வீரராகவராவ் நலம் விசாரித்தார். ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், நகராட்சி ஆணையர் ராமர், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளீதரன் உடன் இருந்தனர்.பின் கலெக்டர் கூறுகையில், வட மாநில பக்தர்கள் நலமாக உள்ளனர். இவர்களை சொந்த ஊர் அனுப்பவும்,சூறாவளியில் சேதமடைந்த 28 படகுகளை பழுது நீக்க நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.