பதிவு செய்த நாள்
10
மே
2020
05:05
மாமல்லபுரம்:தமிழகத்தின் பல பகுதிகளில், கோவில் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. கோவில் நிர்வாக குழுவினர், மக்களிடம் நன்கொடை வசூலித்து, திருப்பணி மேற்கொண்டனர்.
மாமல்லபுரம், கும்பகோணம், காரைக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கோவில் கட்டட, சிற்பக் கலைஞர்கள், இப்பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவில் கட்டுமான பணிகளும் முடங்கின.இதனால், கோவில் நிர்வாகத்தினர், தற்காலிகமாக பணியை நிறுத்தி, கலைஞர்களை, சொந்த ஊருக்கு அனுப்பினர். இது குறித்து, மாமல்லபுரம் கலைஞர்கள் கூறியதாவது:பெரும்பாலான கோவில்கள், மக்கள் அளித்த நன்கொடை நிதியில்தான் கட்டப்படுகிறது. ஊரடங்கால், இப்போது, பணியை நிறுத்தி விட்டனர். வசூல் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே செலவு செய்கின்றனர். நிலைமை சீரானதும், மீண்டும் வசூலித்து, பணியை துவக்குவதாக தெரிவித்துள்ளனர். அதுவரை, எங்களுக்கும், தொழில் பாதிப்புதான்.இவ்வாறு, அவர் கூறினர்.