பதிவு செய்த நாள்
10
மே
2020
05:05
புதுடில்லி: ‘ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை நடத்துவது குறித்து, ஒடிசா மாநில அரசே முடிவு செய்யலாம்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில், பிரசித்தி பெற்ற புரி ஜெகநாதர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ரத யாத்திரை பிரமாண்டமாக நடக்கும். இந்தாண்டு யாத்திரயை, அடுத்த மாதம், 23ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா பிரச்னை காரணமாக, ரத யாத்திரை நடத்தப்படுமா என்ற குழப்பம் இருந்தது. இதையடுத்து, ‘ரத யாத்திரையை நடத்துவது குறித்து, ஒடிசா மாநில அரசே முடிவு எடுக்கலாம். ஆனால், ரத கட்டுமான பணிகளை துவங்கலாம். பணியின்போது, பக்தர்கள், பொதுமக்கள் அதிக அளவில் திரளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.