பதிவு செய்த நாள்
11
மே
2020
11:05
வீரபாண்டி: அக்னி நட்சத்திர வெப்பம் தகித்து வரும் நிலையில், உக்கிரம் தணிய, மருந்தீசருக்கு தாராபாத்திரம் அமைத்து, இடைவிடாது பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. கோடையில், அக்னி நட்சத்திரம் எனும், கத்திரி வெயில் காலத்தில், வழக்கத்தை விட, வெப்பம் பல மடங்கு அதிகரித்து, மக்கள் பாதிக்கப்படுவர். நீர்நிலைகள் வறண்டு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால், நல்ல மழை பொழிய, வெயிலின் உக்கிரம் தணிய, சிவாலயங்களில், மூலவர் ஆவுடையாருக்கு, தாராபாத்திரம் அமைத்து, பன்னீர் அபிஷேகம் செய்யப்படும். அதன்படி, ஆட்டையாம்பட்டி, சென்னகிரி வட்டமலை காலனி, மருந்தீசர் கோவிலில், நேற்று, மூலவர் ஆவுடையார் மீது, தாராபாத்திரம் அமைத்து, அதில் வெட்டிவேர், விளாமிச்சம் வேர், பன்னீர் ஊற்றி ஈசன் மீது, இடைவிடாது, அபிஷேகம் செய்யும்படி வைத்து, சிவாச்சாரியார்கள் மட்டும் பூஜை செய்து வருகின்றனர். ஊரடங்கால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.